Karnataka logo

Karnataka Tourism
GO UP
white pearl cruise experience karnataka

ஒயிட் பேர்ல் குரூஸ்-இன் அனுபவம்

separator
  /  ஒயிட் பேர்ல் குரூஸ்-இன் அனுபவம்
White Pearl Cruise

கர்நாடக நீர்நிலைகளில் ஒயிட் பேர்ல் குரூஸ் மூலம் பயணித்து மகிழ்ந்திடுங்கள்

இயற்கை அன்னையின் புதைந்துக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான ரகசியங்களையும் மர்மங்களையும் ஆராய்ந்து அறிந்துக்கொள்ளவது  பயணிகளுக்கு வாய்க்கும் ஒரு அற்புதமான வாய்ப்பாகும். நீர்நிலைகளான ஆறு மற்றும் கடலை இணைக்கும் இடங்கள்(நதி முகத்துவாரம்), ஏரிகள், நாம் வாழ்நாளில் வேறெங்கும் காணமுடியாத அரிய வகை தாவரம் மற்றும் விலங்கினங்கள், அவற்றின் முழுமையான சுற்றுசூழல் அமைப்புகள் ஆகிய நீர்நிலைகளை பற்றி ஆராய்வது என்பது சிலிர்ப்பூட்டும் சாகசமாக இருப்பது மட்டுமின்றி ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் அமையும். வனவிலங்கு விரும்பிகளும், உலகம் சுற்றும் பயணிகளும் விரும்பும் அழகை ஆபரணமாக அணிந்திருக்கும் கர்நாடக மாநிலம் இந்திய துணைக்கண்டத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இதன் அபாரமான அழகில் பயணிகள் திளைத்திடுவார்கள். மலைகள், ஏரிகள், காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற கர்நாடகத்தின் இயற்கை அழகு நாம் கண்ணால் காண்பதைவிடுவும் மிக  அற்புதமானவை. இந்த மாநிலம், காண்பவர் கண்களை கவர்ந்திழுக்கும் பல இடங்களை அணிகலன்களாக அணித்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

ஒயிட் பேர்ல் குரூஸ் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்

கர்நாடக மாநிலத்தில்  துவங்கியுள்ள குரூஸ் சேவைகள், மாநிலத்தின் பல இடங்களில் உள்ள பிரம்மாண்டமான  நீர்நிலைகள், நதி முகத்துவாரம் போன்றவற்றை கண்டுகளிக்க பயணிகளை அழைத்துச்செல்கிறது. கர்நாடகத்தில் ஒயிட் பேர்ல் குரூஸ் சிறந்த சேவைகளுள் ஒன்றாக விளங்குவது மட்டுமின்றி, அரேபியன் நீர்நிலைகள் மற்றும் நதியின் முகத்துவாரங்களில் பயணிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பையும் பயணிகளுக்கு வழங்குகிறது. இது ஒருவர் மிக சௌகரியமாக, வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை வழங்கும் அனைத்து அத்தியாவசிய வசதிகளுடன், எல்லையில்லா காடுகளையும், கர்நாடக நதி முகத்துவாரங்களையும் கண்டு பூரித்து போக செய்கின்றது. ஒயிட் பேர்ல் குரூஸ் கம்பீரமாக விளங்கும் கோகர்ணாவில்  கண்கவர் நீர்நிலைகளிடையே பயணிக்கிறது.

இந்த குரூஸ், கோவாவின் தலைச்சிறந்த கைவினைஞர்களால் கவனமாக உருவாக்கப்பட்டது மட்டுமின்றி இது ஆடம்பரமான படுக்கை அறைகளையும் சுத்தமான கழிவறைகளையும் கொண்டிருக்கிறது. தூய்மைவாய்ந்த இயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் அழகை ரசிக்க பயணிகளின் சௌகரியத்துக்கு ஏற்ற சிறந்த அமைப்புகளை  இது தன்னகத்தே கொண்டுள்ளது. தண்ணீரில் மெதுவாக மிதந்தவண்ணம், இந்த கப்பல், பரந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலங்கள், பனைமரங்கள் மற்றும் பல அழகிய இடங்களினிடையேவும் செல்லும், அங்கு நீங்கள்  அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகளையும்  கண்டு மகிழலாம். நதி முகத்துவரங்களை சுற்றியிருக்கும் அற்புதமான சுற்றுசூழல் உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.

நீங்கள் கர்நாடகாவிற்கு செல்லும் போது ஒயிட் பேர்ல் குரூஸ் உங்களுடைய பயண பட்டியலில் முதலில் இருக்க வேண்டும். இந்த இடம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கக்கூடியதா என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், இந்த குரூஸ் அதன் பயணிகளுக்கு சுற்றிக்காட்டி  தன் பணியை மிகச் சிறப்பாக செய்கிறது என்பதைக்  கண்கூடாக காணலாம், அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த பயணம் முற்றிலும் மறக்கமுடியாத ஒன்றாக இருப்பது மட்டுமின்றி இயற்கை அன்னையின் அழகும் உங்களை முழுமையாக ஆட்கொண்டுவிடும்.