Karnataka logo

Karnataka Tourism
GO UP
sharavathi adventure camp karnataka

ஷராவதி சாகச முகாமில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்

separator
  /  ஷராவதி சாகச முகாமில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்

ஷராவதி சாகச முகாம் பிரமாண்டமான மலைகள் மற்றும் அமைதியான காடுகளின் மத்தியில் அமைந்துள்ளது.  இந்த லாட்ஜில் இருந்து இயற்கை அன்னையின் அற்புதமான அழகை ரசிப்பது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. ஏனெனில் சுற்றுலாப் பயணிகள் எண்ணற்ற அரிய தாவர வகைகள், வனவிலங்குகள், காட்டில் வாழும் உயிரினங்களின் இயற்கையான மட்டுமின்றி எட்டுத்திக்கும் பரவியிருக்கும் வனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பையும் கண்டு மகிழலாம். ஜோக் நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தில்,  கர்நாடகாவின் வனவிலங்குகளின் பெருமையை பறைசாற்றும் வகையில் பச்சை பசேலென பசுமை பொங்க பரந்து விரிந்திருக்கும் காடுகளை ரசிப்பதற்கு ஷராவதி சாகச முகாம் ஒரு சிறந்த இடமாகும்.

ஷராவதி சாகச முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி பருவக்காலத்தில் மலர துவங்கும், இது தென்மேற்கு மழை மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் காலம். தொலைத்தூரத்தில் இருக்கும் பிரம்மாண்டமான மலைகளும், மூடுபனிகளிடையே எட்டிப்பார்க்கும் அவற்றின் சிகரங்களும், மழை துளிகள்  முத்துக்களாக மின்னும் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்களும், தெளிவான நீல வானம் ஆகிய அனைத்தையும் ரசிக்கும் வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு கனவு போன்றது. இந்த பகுதியில் வானிலை எப்போதும் சௌகரியமாக இருக்கும், மழை சாரல் அழகை மெருகூட்டினாலும், ஷராவதி சாகச முகாம் மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை அனுபவிப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.

இந்த முகாம் மற்றும் வீடுகளிலிருந்து சில கி.மீ தூரத்திலேயே ஷராவதி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கின்றது, மேலும் வெவ்வேறு வகை மரங்கள், புதர்கள் மற்றும் தாவரங்களும் இருக்கின்றது. இயற்கை அன்னையின் எழிலை விரும்பும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அற்புதமான காட்சியாக அமையும். அதோடு நீங்கள் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் மட்டுமின்றி, குளத்துக் கொக்கு(குள நாரை), சாம்பல் தலைக்கொண்ட செம்மீசைச் சின்னான், ஹார்ன்பில் (மரத்தில் கூடுகட்டும் இருவாய்ச்சி), இந்திய மயில்(நீல மயில்) மற்றும் மீன் கொத்தி (கிங்பிஷர்ஸ் ) போன்ற காணக்கிடைக்காத அரிய வகை பறவைகளை பார்க்கலாம். அதைப் போன்று சரணாலயத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் கருப்பு காட்டு முயல், லங்கூர் குரங்குகள் மற்றும் அணில் போன்ற விலங்குகளையும் காணலாம். ஜெயின் பத்மாவதி கோவிலின் அருகே செல்லும் படகு சவாரி ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை வழங்கும்.

ஷராவதி சாகச முகாம் அகத்திலும் சரி, புறத்திலும் சரி, பல விதமான விஷயங்களை கண்டறிவதற்கான ஒரு இடமாக  விளங்குகிறது. எல்லையில்லாத அமைதியும், காடுகளினிடைய எழும் சிறு சிறு சத்தமும், மெல்லிய தென்றலுடன் பரவும் காட்டின் மனம் கமழும் நறுமணமும் நாம் மன நிம்மதியுடன் ஓய்வெடுப்பதற்கான சரியான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்கின்றது. இந்த முகாம் சௌகரியமானதாக  இருப்பதுடன் நமக்கு தேவையான சகல வசதிகளையும் கொண்டுள்ளது. இவை அனைத்தையும் விட  நாவிற்கினிய உணவும் இங்கு கிடைக்கிறது. இது பார்வையாளர்களுக்கு, வனப்பகுதியை அருகில் இருந்து ரசிப்பதற்கும், அதன் அழகில் மயங்கி காட்டுடன் ஒன்றாக கலந்திடும் அனுபவத்தை வழங்குகிறது.

Screen Reader A- A A+