Karnataka logo

Karnataka Tourism
GO UP
Image Alt

யானா குகைகளுக்கு பயணம்

separator
  /  யானா குகைகளுக்கு பயணம்
Trip To Yana Caves

யானை குகைகளில் புதைந்துக்கிடக்கும் ரகசியங்களை கண்டறிந்து உங்களை புதுப்பித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு

இயற்கை அன்னையின் அற்புதமான படைப்புகளில் கர்நாடக மாநிலத்தில் உத்தர கன்னடா மாவட்டத்தில் கும்டா என்ற இடத்தில் அமைந்திருக்கும் யானை குகையும் ஒன்று, இந்த குகை கண்கவர் இடமாக இருப்பது மட்டுமின்றி மர்மம் நிறைந்ததாகவும் இருக்கின்றது. அடர் கரு நிறத்திலிருக்கும், இந்த குகை சுண்ணாம்புக்கரடினால் உருவானது, இதன் தனித்துவம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் உருவாக்க முறை பிரசித்திப்பெற்றது. கும்டாவின் காடுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த அற்புதமான கற்கள் 390 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கின்றது. இந்த பிரம்மாண்டமான பாறைகளுக்கு இரண்டு தனித்துவம் வாய்ந்த சிகரங்கள் உண்டு, அதில் உயரந்த சிகரம் பைரவேஸ்வர சிகாரா என்றும் மற்றோன்று மோகினி சிகாரா என்றும் அழைக்கப்படுகிறது. கம்பீரமாக நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு சொந்தமான பாறைகளை நிலப்பரப்பாக கொண்டிருக்கும் யானை மலை கிராமம் அதை கொண்டாடுகிறது என்று சொன்னால் மிகையாகாது. பச்சை பசேலென பரந்து விரிந்திருக்கும் புல்வெளிகள் நிறைந்திருக்கும் காட்டின் மத்தியில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் இந்த குகை சுற்றலா பயணிகளுக்கு காணக்கிடைக்காத வரப்பிரசாதமாகும்.

சிலிர்க்கவைக்கும் சுற்றுசூழல்

யானை குகையை சுற்றியிருக்கும் இடம் அற்புதமானது, மலைகள், அருவிகள் நிறைந்தது மட்டுமின்றி தனித்துவமான ஒரு வகை பாறை உருவாக்கத்தையும் கொண்டது. நீங்கள் சாகஸத்தையும் விறுவிறுப்பான அனுபவங்களையும் விரும்புவர்களானால் யானை குகைகளுக்கு சென்று வரும் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளின்றி திகைத்துப்போவீர்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அது கருப்பு நிறமாக இருப்பினும், நீங்கள் கூர்ந்து கவனித்தால் அதன் அற்புதமான ஈர்ப்பு மிக அருமையான, இயற்கை அமைப்பு உங்களை பிரம்மிக்க வைக்கும்.

மனம் கவரும் புராணம்

யானை குகைளின் வரலாற்றில் இந்து புராண குறிப்புகள் பதிந்திருக்கின்றது. பாஸ்மாசுரன் என்ற அரக்கர்களின் மன்னனுக்கு சிவப்பெருமான் வரம் வழங்கியுள்ளதாகவும், அது அந்த அரக்கன் எவர் ஒருவரின் தலை மீது கைவைக்கிறாரோ அவரை எரித்து கொன்றுவிடக்கூடும் என்று கதைக்கூறுகிறது. இந்த வரம் சாபமாக மாறி அந்த அரக்கரின் சக்தி பலம் பெற்றதை எண்ணி கடவுள்கள் கவலை பட ஆரம்பித்தனர். எம்பெருமான் விஷ்ணுவின் திட்டத்தின் படி அவர் மோஹினியாக உருமாறி, அவரை மயக்கி இறுதியாக பாஸ்மாசுரனே தானே தன் கைகளை அவர் தம் தலைமீது வைக்கும் படி செய்தார். இந்த ஒட்டு மொத்த நிகழ்வின் விளைவினால் பாஸ்மாசுரனின் சாம்பலினால் குகைகள் கருப்பு நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
யானை குகைகள் என்பது பயணிகளுக்கு மெய்மறந்து போகச் செய்யும் நிலப்பரப்புடன் அற்புதமான வரலாற்றை கொண்ட முழுமையான கண்கவர் விருந்து என்று சொல்லலாம். கர்நாடகாவை சுற்றி பார்க்க செல்லும் போது இந்த அசத்தலான இடத்தை தவறாமல் கண்டு களியுங்கள்.