Karnataka logo

Karnataka Tourism
GO UP
Devbagh Resort karnatakatourism

தேவ்பாக் பீச் ரிசார்ட், கார்வார்

separator
  /  தேவ்பாக் பீச் ரிசார்ட், கார்வார்
ದೇವಬಾಗ್ ಬೀಚ್ ರೆಸಾರ್ಟ್

ஜங்கிள் லாட்ஜின் தேவ்பாக் பீச் ரிசார்ட்டில் எனக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவங்கள்

தேவ்பாக் என்பது கர்நாடகத்தில் அமைந்திருக்கும் ஒரு அழகிய கடற்கரை இடம். இந்த இடத்தில் இருக்கும் கடற்கரை அமைதியானது மட்டுமின்றி அழகானது, அத்துடன் இந்த இடம் சுற்றுலா பயணிகளின் தனிமைக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாதவாறு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பீச் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அசத்தல் அழகை கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விரைவாக வெளியேறி அலைபாயும் மனதை அமைதியில் ஆழ்த்துவதற்கு சரியான இடமாக இது உள்ளது. தூரத்தில் உயர்ந்து நிற்கும் பசுமைக்கே உரித்தான பச்சை நிற பனைமரங்களுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் அரேபிய கடலின் மயக்கவைக்கும் மர்மமான அடர் நிற நீரின் அழகு இந்த பீச்சுக்கு கூடுதல் மெருகேற்றி காண்போரை திகைக்கவைக்கும். நிம்மதியை தரும் கடலுடன் தெளிவான, நீல நிற வானம் வறண்ட கண்களுக்கு விருந்தாக அமைகிறது, அதோடு இந்த அசத்தலான இயற்கை அன்னையின் அழகை ரசித்தவாரோ, மணல் கோட்டைகள் கட்டியோ அல்லது கடலின் புத்துணர்ச்சியூட்டும் காற்றையோ ரசித்தவண்ணம் நேரம் செல்வதே தெரியாமல் மகிழ்ச்சியில் திளைத்திருக்கலாம்.
தேவ்பாக் சாகசத்துடன் மிக சரியாக ஒத்துப்போகும் அமைதியை வழங்குகிறது. ஸ்நோர்கெலிங், பாராசெய்லிங், ஸ்பீட் போட் க்ரூஸஸ் மற்றும் படகு சவாரி போன்ற விளையாட்டில் பங்குப்பெற விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இது உள்ளது.. இது போன்ற விளையாட்டுகளில் பங்குபெறுவதற்கான முழு சுதந்திரமும் சுற்றலா பயணிகளுக்கு இருக்கின்றது. இந்த விளையாட்டுகளின் போது பின்பற்ற வேண்டிய தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இங்கு மிக சரியாக எடுக்கப்படுகின்றது.
தேவ்பாக் ரிசார்ட்டில் அருமையான, பீச் தீம் நிறைந்த அமைதியான உணர்வு இருக்கின்றது. ரிசார்ட்டில் அவசியமான அனைத்து வசதிகளும் இருக்கின்றது, அனைத்து அறைகளும் சௌகரியமானவையாக இருப்பதோடு அவர்களின் சேவை பாராட்டும் வகையில் இருக்கின்றது. சுற்றுலா பயணிகள் அமைதியாக ஓய்வெடுக்கும் வகையில் ஒவ்வொரு அறையிலும் ஊஞ்சற் படுக்கை அமைக்கப்பட்டுள்ளது, அத்துடன் சுற்றி பரந்திருக்கும் காட்டின் சாரத்திலும், கடலின் அமைதியான அலைகளின் சத்திலும் மூழ்கி திளைத்திட ஒவ்வொரு இரவும் போன் ஃபயர் மூட்டப்படுகிறது. இந்த ரிசார்ட் புகைப்படம் எடுப்பதற்கு மிக பொருத்தமான இடமாக அமைந்திருக்கிறது. அதன் காட்சிகள் அசத்தலாக இருப்பது மட்டுமின்றி ஃபோட்டோக்களுக்கு பொருத்தமானவையாகவும் உள்ளது. அருகில் அமைந்திருக்கும் புத்துணர்ச்சியூட்டும் கடற்கரையின் சத்தத்தையும் உங்களால் கேட்க முடியும். ஆகவே தேவ்பாக்கின் இந்த ஒட்டுமொத்த சுற்றுசூழலும், முழு பயண அனுபவத்தையும் சிறப்பானதாகவும் மறக்கமடியாததாகவும் மாற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.
தேவ்பாக்கில், நான் குறிப்பாக மிகச்சிறந்த கடலோர உணவை உண்டு மகிழ்ந்தேன். இந்த ரிசார்ட் வியக்கவைக்கும் ஸ்டார்ட்டர்கள் மற்றும் பார்பிக்யூவை வழங்குவது மட்டுமின்றி சுவையான உணவையும் பரிமாறுகிறது. இப்பகுதியின் அருகிலிருக்கும் காளி நதி இதற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைகிறது. நான் படகு சவாரியில் நதியை பின்தொடர்ந்து சென்றப்போது அது நேரடியாக கடலை சென்றடைந்ததை எண்ணி திக்கு முக்காடிப் போனேன். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் கடலின் அலைகளில் விளையாடும் டால்பின்களையும் பார்க்கலாம்.
தேவ்பாக் ரிசார்ட் ஜங்கிள் லாட்ஜஸ் என்பது நீங்கள் உங்கள் வாழ்நாளில் அவசியம் பார்த்து மகிழக்கூடிய ஒரு இடம், இது பீச் விரும்பிகளுக்கு பொருத்தமாக விளங்கும் ஒரு கடற்கரைப்பகுதி. தேவ்பாக்கின் சூரியன் உதயம் மற்றும் சூரியன் அஸ்தமத்தின் அழகு நம்மை வாயடைத்து நிற்க வைத்துவிடும். இந்த அற்புதமான மற்றும் அசத்தலான அழகுடைய கடலோரப்பகுதி அனுபவம் என்னுடைய பயணத்திற்கு கூடுதல் செறிவூட்டுயிருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.

Devbagh Beach Resort Virtual Tour

வழிகாட்டியை பற்றிய கண்ணோட்டம்

செல்வதற்கான சிறந்த சீசன்

அக்டோபர் - மே. நீர் விளையாட்டிற்கு கோடைக்காலமே சிறந்த தருணம்

பயணத்திற்கான டிப்ஸ்

- தொப்பி, சன்ஸ்க்ரீன், சன் க்ளாஸஸ், டார்ச், ஆகியவற்றை உடனெடுத்து செல்லுங்கள்.

- செல்லப்பிராணிகளுக்கு அனுமதியில்லை.

- பிளாஸ்டிக்குகளை தவிர்க்கவும்.

- நடப்பதற்கு சௌகரியமான காலணிகளை எடுத்து செல்லுங்கள்.

எப்படி இடத்தை அடைவது

86 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கோவா இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டே அருகில் உள்ள ஏர்போர்ட்.

மும்பை, பூனே, பெங்களூர், மற்றும் மங்களூரிலிருந்து கார்வார் செல்லும் ரயில்களை இணைக்கும் ரயில் நிலையம் அருமகமையில் இருக்கின்றது.

ஒருவர் பெங்களுரிலிருந்து தேவ்பாக் பீச்சிற்கு டிரைவ் செய்யவேண்டுமெனில், அந்த இடத்தை 527 கிலோமீட்டர்களில் அடைந்து விடலாம்.

ரிசார்ட் கான்டாக்ட் விவரங்கள்:

தரிவாடா, போஸ்ட், சதாசிவ்காடு, கார்வார்-581352

லேண்ட்-லைன்: 08382-221603

மின்னஞ்சல் முகவரி: info@junglelodges.com

வலைத்தளம்: junglelodges.com

நீர் விளையாட்டு:

- வாழை சவாரி

- வேக படகு

- கயாக்கிங்

- ஜெட் ஸ்கை ரைடு

- ஸ்நோர்கெலிங்

- பம்ப் ரைடு

Screen Reader A- A A+